சென்னை அண்ணாச்சாலை சிக்னலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 450 கிலோ தங்கம் சிக்கியது.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.
அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலை சிக்னலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 450 கிலோ தங்கம் சிக்கியது. தியாகராயநகரில் இருந்தே சவுகார்பேட்டை கொண்டு சென்ற போது தங்க கட்டிகள் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை சிக்கியது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் காண்பித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பறக்கும்படை மீண்டும் ஒப்படைத்தது.