கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மராட்டியத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக பெண் மருத்துவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வருகிறது.
நாடு முழுவதும் பதிவாகும் தினசரி பாதிப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் மராட்டிய மாநிலத்தில் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் தொற்று நோய் தடுப்பு சிறப்பு நிபுணரான மும்பையை சேர்ந்த மருத்துவர் திருப்தி கில்லாடி கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கலங்க செய்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கூட வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்வதாக திருப்பதி கில்லாடி வீடியோவில் தெரிவித்துள்ளார். நம்பிக்கை இழந்து நிற்கதியாக நிற்கிறோம் என்று கண்ணீருடன் கூறும் திருப்தி கில்லாடி பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.