உத்திர பிரதேசம் மாநிலம் சீதாபூரில் வசிக்கும் சஃபி அஹ்மது. இவர் சமீபத்தில் 5வது திருமணம் செய்துக்கொள்ள தயாரானார். திருமண வைபவம் நடக்கும் இடத்திற்கு அஹ்மதின் பிற முந்தைய மனைவியர் மற்றும் 7 குழந்தைகளின் வருகையால் அதிரிபுதிரியானது. அஹ்மதின் மதத்தில் பலதாரமணம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 55 வயதடைந்க சஃபி அஹ்மதுக்கு ஏற்கனவே 4 மனைவிகள் மற்றும் அவர்கள் மூலம் பெற்ற 7 குழந்தைகள் உள்ளனர். அஹமது கடந்த 30ம் தேதியன்று 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டப்படி திருமண நிகழ்வுகள் நடந்துக்கொண்டிருந்த போது தான், சின்ன சலசலப்பு ஏற்பட்டது.
அது அஹ்மதின் திருமணத்திற்கு ஒரு இடர்பாடாகவும் அமைந்தது. ஆம்! அப்போது தான் மாஸாக திருமண நிகழ்வு நடந்துக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்தனர் அஹமதின் முந்தைய மனைவிகளும், வாரிசுகளும். அங்கே, குழந்தைகள் தங்களது தகப்பனாராகிய அஹமது குறித்து புட்டு புட்டு வைக்க வாக்குவாதம் உருவானது, இது பின்னர் சண்டையில் சென்று முடிந்தது.