Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்குவாரா ”தல” திக்திக் காட்டிய ”ரூல்ஸ்”… கெத்து காட்டி தப்பிய தோனி….!!

மீண்டும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என இருந்ததை தோனி தகர்த்துள்ளார்.

கடந்த பத்தாம் நாள் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான ஐபிஎல் டி- ட்வென்டி தொடரில் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் பந்து வீசாமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு பன்னிரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இந்த விதியை மீறினால் அணியின் கேப்டன் அடுத்த இரண்டு முதல் நான்கு போட்டிகளுக்கு விளையாட முடியாது என்று கூறப்படுகிறது .

இதனால் ராஜஸ்தான் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேற்றைய ஆட்டம் அதிகம் கவனிக்கப்படது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி வெற்றியை பெற்று கலக்கியுள்ள நிலையில் தல தோனி ஐசிசி விதிகளை மீறாமல் சரியான நேரத்திற்குள் பந்து வீச வைத்து கெத்து காட்டியுள்ளார்.

Categories

Tech |