Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்சருக்கு பறந்த பந்து …. ‘கிங் கோலியின் அசாத்திய பேட்டிங்’ …. வைரல் வீடியோ ….!!!

நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அடித்த சிக்சர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு புள்ளி பட்டியலிலும் சென்னை அணி முதலிடம் பிடித்தது .இதில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி 53 ரன்கள் எடுத்து அசத்தினார். இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 4-வது ஓவரை சென்னை அணியில் ஷர்துல் தாகூர் வீசினார் .

https://twitter.com/CowCorner9/status/1441426006577844224

அப்போது அந்த ஓவரில்  4-வது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி நின்ற இடத்திலிருந்து  சிக்சருக்கு அடித்தார். ஆனால் அந்த  ஷாட்டின்போது பந்து செல்லும் திசையை விராட் கோலி பார்க்கவில்லை .அதேசமயம் பந்து  82 மீட்டர் தூரம் சென்று மைதானத்துக்கு வெளியே விழுந்தது. விராட் கோலியின் அசாத்திய பேட்டிங் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |