Categories
மாநில செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் கொள்முதல்….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை.

எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி செயல்படும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் காலி  சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்துள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் மூலம் 248 காலி சிலிண்டர்கள் சென்னை கொண்டு வரப்பட்டன. சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து இந்த காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |