இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு போக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்ற சனிக்கிழமை கோத்தபயராஜபக்சவின் மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். எனினும் அதற்கு முன்னதாகவே தன் இல்லத்தைவிட்டு வெளியேறிய கோத்தபய ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இச்சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்ச இன்று காலை ராணுவ விமானம் வாயிலாக தன் மனைவியுடன் இலங்கையிலிருந்து புறப்பட்டு மாலதீவுக்கு வந்தடைந்தார். இச்சூழலில் கோத்தபய ராஜபக்ச இன்று மாலதீவிலிருந்து சிங்கப்பூருக்கு போக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிங்கப்பூரில் தஞ்சம் அடைய கோத்தபய ராஜபக்சவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.