பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து சென்னை வந்தவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பி அவர்களின் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.