கொரோனா பரவல் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ஓபன், மலேசிய ஓபன் ஒத்தி வைக்கப்பட்டதால் ஒலிம்பிக் கனவில் இருந்த வீரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் இந்த மூன்று தொடர்களில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற இருந்த நிலையில் ஒலிம்பிக் கனவு தகர்ந்து உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories