சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சிந்து, சாய்னா, பிரனாய், அஷ்மிதா ஆகியோர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார்கள். இதில் உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ள பிங் ஜியோவை சாய்னா நேவால் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து சிங்கப்பூர் ஓபன் பட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ் பிரணாய் ஜப்பானின் கொடை நரோகாவை எதிர்கொள்கிறார்.
அதனைப் போல பெண்கள் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து சீனாவின் ஹான் யூவுடனும், சாய்னா நோவால் ஜப்பானின் அயா ஓஹோரியுடனும் மோத உள்ளனர். அதே நேரத்தில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ கபிலா, அர்ஜுன் ஜோடி இந்தோனேசியா பட்மிண்டன் வீரர்களான முகமது அஹ்சன், ஹெந்திரா செட்டியவான் எதிர்கொள்கிறார். அதனை தொடர்ந்து முதல் 3 நாட்களுக்கான போட்டிகளும் எந்தவித சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட வில்லை. ஆனால் BWF இன் அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் BWF டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் Sports 18-1 என்ற சேனலில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிறுதிப் போட்டிகள் இந்திய நேரப்படி 1 மணி முதல் இரவு 9 மணி வரையும், அரையிறுதிப் போட்டிகள் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், இறுதிப்போட்டி மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.