வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சிட்கோ தொழில்பேட்டை அருகே தலையில் வெட்டு காயத்துடன் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. ஐடிஐ படித்து முடித்த விக்னேஷ் சிங்கப்பூர் செல்வதற்காக விசாவுக்கு காத்திருந்தார். இந்நிலையில் செல்போனுக்கு வந்த அழைப்பின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மது போதையில் ஏற்பட்ட தகராறு வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.