மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர். ரேவதி ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்.
ஷூ கூட வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து வந்து தன்னுடைய ஒலிம்பிக் கனவை அடைந்துள்ளார். இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரேவதிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக அமைச்சர் பி.மூர்த்தி உறுதியளித்துள்ளார். ரேவதி பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ஒரு ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.