தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக பல பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தும் இன்னமும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
மாணவர்கள் தங்களை தாங்கவே எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது கோவை காவல்துறையினர் தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். இந்த திட்டத்தில் மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக, குறிப்பாக பள்ளி மாணவிகள் துப்பாக்கி சுடுவதை கற்றுக் கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இது மாணவிகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.