Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச்சாவடி மூலம் விழிப்புணர்வு… தாசில்தார் தலைமை..!!

சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச் சாவடி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வாக்குச்சாவடி சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே தற்காலிக வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி முன்னிலையில் வகுத்துள்ளார்.

தாசில்தார் திருநாவுக்கரசு இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். வருவாய் ஆய்வாளரான ராஜாமுகமது எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து எடுத்துரைத்துள்ளார். அதன்பின் வாரச்சந்தைக்கு வரும் பெண்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தாசில்தார் திருநாவுக்கரசு துண்டுபிரசுரத்தை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிங்கம்புணரி தென்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சபரி, தமிழாசிரியர் சேவுகமூர்த்தி, வட சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |