சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பூசி ஒரே நாளில் 136 பேருக்கு போடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுந்தரம் நகர் மக்கள் மன்றத்தில் அரிமா சங்கம் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து 40 வயது பூர்த்தியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியது. இது மருத்துவ அலுவலர் நபீஷா பானு உத்தரவின் பேரில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பரணிராஜன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு அரிமா சங்க தலைவர் செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 40 வயது நிறைவான பெண்கள், ஆண்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒரே நாளில் சிங்கம்புணரியில் கடந்த 9-ஆம் தேதி 136 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.