பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை பேருந்துநிலையம் முன்பு சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் பெட்ரோல், சமையல் கேஸ் சிலிண்டர், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் வட்டார காங்கிரஸ் தலைவர் மற்றும் தலைமை பேச்சாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.