திமுக விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வரவேண்டும் நான் வருகிறேன் திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஆ.ராசா மேல்முறையீடு பற்றி விவாதிக்க கோட்டையில் வரத் தயாரா? என்று சவால் விடுத்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் அதற்கு இன்னும் வாய் திறக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வர வேண்டும், நான் வருகிறேன். திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை தாக்க வந்த புயல் அதிமுக ஆட்சி என்பதால் யூ டர்ன் போட்டு திரும்பிச் சென்று விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “கோட்டைக்கு கூப்பிடுங்க எல்லாரையும்… எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த தயாரா?” என்று முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா நேரடி சவால் விடுத்திருந்தார். இப்போது நான் விவாதிக்க வருகிறேன் நீங்கள் தயாரா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.