தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று விஜயகாந்த் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் என்று விஜயகாந்த் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. அதன்பிறகு தேமுதிக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறதா? இல்லை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கப் போகிறதா என்பது தெரியவரும். இதற்கு முன்னதாக அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.