Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளனர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். ஜனதா கட்சி  ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் கார்த்திக். சிங்காநல்லூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,23,614 ஆகும். சிறு குறு தொழில்களுக்கான நவீன தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும், ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் வேண்டுகோளாக உள்ளன. எஸ்.ஏ.எஸ்.ஹச் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மக்கள் கூறுகின்றனர். உழவர் சந்தை அருகே உள்ள குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. திமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Categories

Tech |