Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை  சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான்  ஊருக்கு.

குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி வழிந்த குப்பைகள்,  சாலைகளில் போடுற இடமா மாறிடுச்சு. சென்னை முழுக்க கொசு தொல்ல, எப்போ டெங்கு வரும் ? எப்போ வைரஸ் பரவும் ? என்கிற அச்சம் எல்லா வார்டுகளிலும்  இருக்கு.

சில மண்டலங்களுக்கு மட்டும் குப்பையை அள்ளும் பணியை தனியாருக்கு விட்டுருக்காங்க. அந்த பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே டெண்டர் விட்டது போல காட்டி விதி முறைகளை திருத்தி இருக்கிறாங்க. குப்பைக்கு வரிபோட்ட குப்பை அரசு இது. குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசு இப்போ இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி. இதை நான் கண்டித்த பிறகு தான் ரத்து செஞ்சாங்க என ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |