Categories
சினிமா

சிங்கிளாகவே வலம் வரும் 5 நடிகைகள்…. யாரெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகளுக்கு வயது கூடிக் கொண்டே சென்றாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் சிங்கிளாகவே இருக்கின்றனர். இதில் ஒருசில நடிகைகள் நமக்கு திருமணம் முடிந்தால் வயது தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். அவ்வாறு 40 வயதை கடந்தும் இதுவரை திருமணம் ஆகாத 5 நடிகைகளை பற்றி  பார்க்கலாம்.

1. தபு

தபு தனது திறனுள்ள நடிப்பால் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் ஆவார். இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற தபு முன்னணி நடிகையாக வலம்வந்தார். தற்போது 51 வயதாகியும் தபு சிங்கிள் ஆகவே சுற்றி திரிகிறார்.

2. கௌசல்யா

கௌசல்யா தமிழில் நேருக்கு நேர், சொல்லாமலே, வானத்தைப் போல, ஜேம்ஸ் பாண்ட் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் ஆவார். இவர் வெள்ளித்திரையை அடுத்து சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வந்தார். தற்போது கௌசல்யாவுக்கு 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.

3. நக்மா

தமிழ் திரையுலகில் ரஜினி, பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் நடிகை நக்மா ஆவார். இவர் காதலன், மேட்டுக்குடி, பாட்ஷா போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது நக்மா அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நக்மாவிற்கு தற்போது 47 வயதை கடந்தும் திருமணம்முடியவில்லை.

4. ஷோபனா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷோபனா. மேலும் இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞராகவும் இருக்கிறார். அதன்பின் ஷோபனா ரஜினி, விஜயகாந்த் ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் 52 வயதை தொட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

5. அனுஷ்கா ஷெட்டி

தமிழ், தெலுங்கு படங்களில் கதா நாயகியாக நடித்து வருபவர் தான் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் 2 படத்தின் வாயிலாக அறிமுகமாகி விஜய், சூர்யா, அஜித் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அனுஷ்காவிற்கு 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Categories

Tech |