காதல் கணவர் ரன்வீர் சிங்குடன் வெளிநாடுகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் தீபிகா படுகோனே, அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருவதுடன், சிங்கிளாக சுற்றுபவர்களையும் சீண்டி வருகிறார். ரம்மியமான சூரியஒளி பின்னணியில் ஷெட்டில் நிறுத்தப்பட்ட இரண்டு மிதவண்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, ‘இருவரின் துணை’ #his&hers #vacation என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B8YOo2Mgbel/?utm_source=ig_web_button_share_sheet
இதேபோல் இரண்டு குடைகளை ஒன்றாக இணைத்து வைத்த புகைப்படங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட அவர், ‘மழை அல்லது வெயிலே வருக’ #his&hers #vacation என்று பதிவிட்டிருந்தார்.
https://www.instagram.com/p/B8VboAgAKxu/?utm_source=ig_web_button_share_sheet
இதற்குமுன்னதாக, கடற்கரை மணலில் இரண்டு ஜோடி காலணிகளை வைத்து புகைப்படமெடுத்து, ‘வழிகாட்டும்போது நான் எப்போதும் உன் மீது சாய்ந்துகொள்வேன்’ #his&hers #vacation என்று அடுத்தடுத்து தனது விடுமுறையின் ரெமாண்டிக் தருணங்களை புகைப்படங்களாக பதிவிட்டு சிங்கிள்களை வெறுப்பேற்றி வருகிறார்.
https://www.instagram.com/p/B8TAaaEAWss/?utm_source=ig_web_button_share_sheet
முன்னதாக, விடுமுறைக்காக வெளிநாடு செல்லவுள்ளோம் என்ற தகவலை தெரிவிப்பதற்காக தங்கள் இருவரின் பாஸ்போர்ட்டை புகைப்படமாக எடுத்து பதிவிட்டதிலிருந்து சிங்கிளை சீண்ட தொடங்கினார் தீபிகா.
https://www.instagram.com/p/B8PZAfNgVcc/?utm_source=ig_web_button_share_sheet
ஆசிட் வீச்சுக்கு பாதிப்புக்குள்ளான லட்சுமி அகர்வால் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நடித்து, தயாரித்த ‘சப்பாக்’ படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்றது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் தீபிகா, காதல் கணவர் ரன்வீருடன் குதூகலமாக விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்த நட்சத்திர தம்பதியினர் இத்தாலி நாட்டில் பாரம்பரிய கொங்கனி முறைப்படியும், சிந்தி முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
திருமணத்துக்குப் பின் இருவரும் மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்கச் சென்ற நிலையில், அவ்வப்போது இதுபோன்று வெளிநாடு பயணத்தை மேற்கொள்வதையும் தவறாமல் கடைபிடிக்கின்றனர்.
தீபிகா – ரன்வீர் ஜோடியாக நடித்திருக்கும் புதிய படமான ’83’ வரும் ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது.