ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியாக செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படலாம் எனவே வாடிக்கையாளர்கள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் மட்டும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.