Categories
தேசிய செய்திகள்

சிட்ரங் சூறாவளி புயல் எதிரொலி!… 1,146 பேர் பாதிப்பு…. வெளியான தகவல்….!!!!

வங்காள விரிகுடாவில் மையம்கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயல் வங்காளதேச நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்று இரவு முன்தினம் 9:30 மணி- 11:30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. இதனிடையில் சூறாவளியால் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகமானது மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அசாம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், வங்காளதேசம் எல்லை மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே சூறாவளி கடந்துபோகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் திரிபுராவில் புயலால் இடி-மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதேபோல் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடல் பகுதிகளுக்கு மக்கள் தேவை இன்றி போவேண்டாம் என அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

அந்த வகையில் அசாம் உட்பட குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களை அந்த சூறாவளி கடந்து சென்றது. அசாமில் சிட்ரங் சூறாவளி பாதிப்பிற்கு 83 கிராமங்களை சேர்ந்த 1,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அசாமில் நகாவன் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் கலியாபோர், பாமுனி, சக்முதியா தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

Categories

Tech |