Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் நலன் மீது அக்கறை இருக்கா?….. அப்ப உங்க கருத்தை சொல்லுங்க….. அறநிலையத்துறை அதிரடி….!!!!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்து சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலை துறை சார்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் விசாரணைக் குழுவினர் திரும்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்தாமல் சட்டப்படி அணுகும்படி தீட்சிதர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. சிதம்பரம் கோவில் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்ட பிரிவு 23 மற்றும் 33-ன்படி  ஆணையாரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் கோவில் மீது அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வருகிற 20 மற்றும் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது கருத்துக்களை 21-ம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பலாம் என இந்து சமய அறநிலை துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: துணை ஆணையர்/ ஒருங்கிணைப்பாளர், விசாரணைக் குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர்- 607001

மின்னஞ்சல்: [email protected]

Categories

Tech |