Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் விவகாரம்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் வரலாறு காணாத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்

Categories

Tech |