Categories
மாநில செய்திகள்

“சிதம்பரம் கோவில் பிரச்சினைக்கு நீங்கள் தான் தீர்வு காண உதவ வேண்டும்”…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி….!!!

சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சுவாமிநாதன், சேகர் பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பிரபாகர் ராஜா ஆகியோர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு செய்தியாளர் இடம் பேசிய சுவாமிநாதன், சுதந்திர போராட்ட தியாகி, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி இரட்டைமலை சீனிவாச சிலைக்கு முதல்வர் ஆணைகினங்க மரியாதை செலுத்தினோம். இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடன் நெருங்கி பழகி அவரோடு வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றவர். இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம் நடராஜர் கோவிலில் புதுச்சேரி ஆளுநர் அவமதிக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ,சிதம்பர நடராஜர் கோவிலில் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஊடகங்கள் செய்தியை கொண்டு செல்ல வேண்டும். சிதம்பர தில்லை நடராஜர் கோவிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புகார்கள் தொடர்ந்து வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |