Categories
தேசிய செய்திகள்

சிதறி கிடந்த 75 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. வெறும் 2 நிமிடத்தில் நடந்த அதிசயம்…. சாதனை படைத்த ஆந்திரா….!!!!

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மெகா பீச் கிளீனிங் திட்டத்தின் வாயிலாக அம்மாநில அரசு முடிவு செய்தது. அந்த வகையில் விசாகப்பட்டினம் கோகுல் பார்க் முதல் பீமலி கடற்கரை வரையிலும் சுமார் 40 இடங்களில் காலை 6- 8 மணிவரை பிளாஸ்டிக்சேகரிக்கும் பணியானது துவங்கியது. இப்பணியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் அமைப்பினர் அப்பார்ட்மெண்ட் அசோசியன் அசோசியேஷன், காலனி அசோசியேசன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 22,517 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 40 இடங்களில் கடற்கரையில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக்பொருட்களை சேகரித்தனர்.

காலை 6 -8 மணிக்குள்ளாக 2 மணி நேரத்தில் சுமார் 75 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாகப்பட்டின மாநகராட்சி கமிஷனர் லட்சுமி ஷா கூறியதாவது “கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மெகா பீச் கிளீனிங் திட்டம் தொடங்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரையிலும் யாரும் 2 மணிநேரத்தில் 75 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்காததால் இந்நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இத்திட்டமானது மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆந்திரவில் அனைத்து கடற்கரைகளும் பொதுமக்கள் உதவியுடன் தூய்மைப்படுத்தப்படும். அத்துடன் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக  ஆந்திரா மாற்றப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |