அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் அக்காளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் தனது முதல் மகளான 9 வயது சிறுமியை தங்கையின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாலிபரின் மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் சித்தப்பாவான அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் பரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனையும், 56 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.