Categories
சினிமா

” சித்தாந்தங்களை வாய் கிழிய பேசுவார்கள்”….. இயக்குனரை மறைமுகமாக திட்டிய பிரபல இசையமைப்பாளர்….!!!

தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா.பாண்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, ஜெய் பீம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதவிட்டிருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர் மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியம்.

ஆனால் அவர் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சிந்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவை எல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி சிந்தாத்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள் என்று பதிவிட்டுள்ளார். இவர் குறிப்பிட்டு இருக்கும் இந்த இயக்குனர் யார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சிலர் அவர்களுக்கு மனதில் தோன்றிய இயக்குனர் பெயரை பட்டியலிட்டு வருகின்றனர். இருப்பினும் அவர் சொல்லியிருக்கும் அந்த இயக்குனர் யார்? என்பதை அவர் பதிவிட்டால் மட்டுமே தெரியும் என்று இணையதளத்தில் பேசி வருகின்றனர்.

Categories

Tech |