தமிழகத்தில் திமுக ஒருமித்த மற்றும் சித்தாந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திமுக கூட்டணி வெறும் எண்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. திமுக கூட்டணி ஒருமித்த மற்றும் சித்தாந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி. கருத்தியல் மூலமாக மட்டுமே நாங்கள் இதயங்களை ஒன்றிணைந்து உள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்கள் சரியான நேரத்தில் தொடங்கும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கட்டாயப்படுத்தவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.