ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தாழ்குனி பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் 2 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாமணியை மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
நான் எனது கணவருக்கு சொந்தமான வீட்டில் மூன்றாவது மகன், மருமகளுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில் வீட்டுக்குள் வரக்கூடாது என கூறி உணவு கொடுக்காமல் என்னை சித்திரவதை செய்கின்றனர். இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே தூங்குமாறு மகனும், மருமகளும் கூறுகின்றனர். வயதாகிவிட்டதால் என்னால் தன்னிச்சையாக வேலை செய்ய இயலவில்லை. எனவே மகன், மருமகன் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.