Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சித்திரை முதல் நாள்…. மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்ட மக்கள்…. கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம்…!!

சித்திரை முதல் நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் நாளாக பார்க்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதலில் மக்கள் வரக்கூடிய இடம் கோயில்களாக தான் இருக்கக்கூடும். இந்நிலையில்  மதுரையில் இருக்கக்கூடிய பெரும்பாலான அனைத்து கோவில்களிலும்  பக்தர்களின் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் காலை 6 மணிக்கு நடையானது  திறக்கப்பட்டு, தற்போது வரை பக்தர்கள் அனைவரும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் கொரோனா  காலம் என்பதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதைப் போன்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி நேரம் போகப் போக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் “போன வருடம் தமிழ் புத்தாண்டு தடைபட்டது. இந்த வருடம் கோவிலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாங்கள் இங்கே வந்து ஒரு 15 நிமிடங்கள் ஆகிவிட்டது காத்துக்கொண்டு இருக்கிறோம்.  பக்தர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள்.  கட்டுப்பாடுகள் இருப்பதினால் கொரோனாவிடம் இருந்து   நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். இது நமக்கு நல்லது தான். சித்திரை திருவிழாவும் இதே போன்று தான் நாங்கள் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கட்டுப்பாடுகள் கண்டிப்பாக வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இதைப் போன்று ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம் உடையும் அணிவிக்கப்பட்டு இருக்கிறது. வைர கிரீடமும் அணி விக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு இருக்கக்கூடிய சுந்தரேசருக்கு வைர நெற்றி பட்டையும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடுமையான போலீஸ் பாதுகாப்பிற்கு பிறகு, இங்கு இருக்கக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |