Categories
பெரம்பலூர்

சித்திரை வந்தாலே விமர்சியாக இருக்கும்… தடையை மீறி நடத்தப்பட்ட திருவிழா… அம்மனுக்கு சிறப்பு படையல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 13 கிராமங்களில் நேற்று முன்தினம் தடையை மீறி முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். கொரோனாவால் கடந்த வருடம் முயல் வேட்டை கொண்டாடப்படவில்லை. இந்த வருடத்தில் விழாக்களுக்கு கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 13 கிராமங்களில் நேற்று முன்தினம் தடையை மீறி திருவிழா நடைபெற்றது. அந்த கிராமங்களில் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டுக்கு ஒருவர் கூடினர். அதன்பின் அங்கு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முயல் வேட்டைக்காக அங்கிருந்தவர்கள் காட்டுப்பகுதிக்கு புறப்பட்டனர். இதையடுத்து அங்கு முயல்களை வேட்டையாடி அவற்றை மேளதாளங்களுடன் தோரணமாக குச்சிகளில் கட்டி தொங்கவிட்டு ஆடிப்பாடி நேற்று முன்தினம் மாலை கிராமத்துக்குள் வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு முயல் கறியை படையலிட்டு சமமாகப் பிரித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின் முயல் கறியை அவர்கள் சமைத்து உண்டனர்.

Categories

Tech |