பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்தது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில் சித்து மிகவும் ஆபத்தானவர் என்றும், அவரை கண்டிப்பாக தேர்தலில் தோற்கடிபோன் என்றும் அமரீந்தர் சிங்க் கூறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். மேலும் இதுகுறித்து அவர், தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் தொண்டராக காங்கிரசில் தொடர்வேன் என்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் பெண் அமைச்சர் ரசியா சுல்தான் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய அவர் பஞ்சாப் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் சித்து. அவருக்கு ஆதரவளித்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்ராவும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் மாநிலத்தின் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.