Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ பட்டமேற்படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தாம்பரம் சானடோரியத்திலுள்ள தேசிய சித்த மருத்துவம் நிறுவனம் மத்திய “ஆயுஷ்” அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2021-22ஆம் ஆண்டு பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மொத்தமுள்ள 58 இடங்களில் நிறுவன ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீத இடங்கள் நிரப்பபட்டன. அதாவது அனைத்து விதமான இந்தியா சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைத் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 70 சித்த மருத்துவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றனர்.

இந்த கலந்தாய்வின் மூலமாக நிறுவன ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடங்கள் மற்றும் அயல்நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன. இதனையடுத்து 3-ம் கட்ட கலந்தாய்வு பிப்., 28 முதல் மார்ச் 3 வரை நடைபெற இருக்கிறது. இந்த 3 கட்ட கலந்தாய்வுகளுக்கு பிறகு அகில இந்திய ஒதுக்கீடுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் மீதம் இருந்தால், அந்த இடங்களுக்கான கலந்தாய்வு பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் பி.ஹெச்டி., ஆராய்ச்சிப் படிப்பிற்கான நடப்பாண்டு மாணவர் சேர்க்கையின் நுழைவுத் தேர்வு மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என்று நிறுவன இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்தார்.

Categories

Tech |