Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சித்தா முறையில் தொற்றுக்கு சிகிச்சை…. 100 படுக்கை வசதிகளுடன்…. சிறப்பாக ஆரம்பித்த மருத்துவ மையம்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்க்காக சிறப்பு சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை வீசத்தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்றை தடுப்பதற்க்காக  தற்போது சிறப்பு சித்த மருத்துவ மையம் ஒன்று கோரிமேட்டிலுள்ள அரசு பெண்கள் கல்லூரியில் திறக்கபட்டுள்ளது.

இதுக்குறித்து மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறும் போது கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையம் 100 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றும் முதல் நிலை தொற்று உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |