Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ முறையை பயன்படுத்த முக்கியத்துவம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது மே-24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்தார். இதனை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ முறையை பயன்படுத்த முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |