ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஊஞ்சலூர் உள்ளிட்ட இடங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் புகழ்மிக்க வீரபத்திர சாமி கோவில் இருக்கின்றது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முன்னிட்டு சென்ற 15ஆம் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் , வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மக்களுக்கு அருள் புரிந்தார். புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் நடைபெற்றது. மாலை 5 மணியளவில் வசந்த உற்சவ நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை கோவிலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை பூஜை நடைபெறவுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் அம்மாபேட்டை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூரில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் இருக்கின்றது. இங்கு வருடம் தோறும் சித்திரா பௌர்ணமியன்று கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி அன்று விழா நடந்தது. சித்ரா பௌர்ணமியான நேற்று காலையில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தார்கள். அதன் பிறகு புனித நீரால் செல்லாண்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பகல் ஒரு மணிக்கு பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்தார்கள். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு மாலையில் மாவிளக்கு ஊர்வலமும் இரவு அம்மன் வீதி உலாவும் நடந்தது.