Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை”… “செய்தியாளர் முன்னாள் அமைச்சரிடம் கேட்ட கேள்வி”…. அதிரடி பதில்….!!!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து மறுவிசாரணை நடத்த எந்தவித பிரச்சனையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஹேமந்த் சித்ராவின் மரணத்துக்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். மேலும் சித்ராவின் மரணத்திற்கு எக்ஸ் எம்எல்ஏ ஒருவர் தான் காரணம் எனவும் சித்ரா பங்கேற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்றார் எனவும் அவருக்கும் சித்ராவுக்கும் இடையில் சில விஷயங்கள் நடந்ததாகவும் கூறியிருக்கின்றார். மேலும் போலீசார் விசாரணையில் அனைத்து உண்மைகளையும் கூற உள்ளதாகவும் சித்ரா இறப்பதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு வழக்கத்திற்கு மாறாக நிறைய போன்கால்கள் வந்ததாகவும் கூறியிருந்தார்.

இதுக்குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். இதையடுத்து சித்ரா இறப்பதற்கு முன்பாக தன்னிடம் கூறியவற்றை போலீசாரிடம் கூற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். சித்ரா இறந்து ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது அவரது மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் பற்றி ஹேமந்த் கூறி இருக்கின்றார். இதனால் சித்ரா வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால் கூடிய விரைவில் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது கூறியுள்ளதாவது, “நடிகை சித்ரா தற்கொலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் மறுவிசாரணை நடத்த எந்த பிரச்சனையும் இல்லை. மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை” என கூறினார். மேலும் “உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |