Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை” தாய் காரணமா….? வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு தொடர்பாக கணவர் ஹேம்நாத்தின் வாட்ஸ்அப் உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

டிவி தொடரில் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஹேம்நாத்தின் நண்பரான சையது ரோஹித் என்பவர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஹேம்நாத் பல பெண்களிடம் பழகி பண மோசடியில் ஈடுபட்டு வந்தார். நான் அவரை பல முறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. எனவே தான் அவரிடமிருந்து நான் விலகிவிட்டேன் என்றார்.

மேலும் அவரை பற்றி அனைத்தும் தனக்கு தெரியும். இருப்பினும் தன்னை காவல்துறையினர் தற்போது வரை விசாரிக்கவில்லை என்றார். இந்நிலையில் ரோஹித் மற்றும் ஹேம்நாத் இருவரும் சித்ராவின் தற்கொலைக்கு பின்பு மறுநாள் இரவு ரகசியமாக பேசிக்கொண்ட வாட்ஸ்அப் கால் உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரோகித் ஹேம்நாத்திடம் காவல்துறையினரிடம் நீ என்ன வேண்டுமானலும் சொல்லு ஆனால் என்னிடம் நீ உண்மையை சொல்லு என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் ஹேம்நாத் சித்ரா படப்பிடிப்பிற்கு தனியாகத்தான் சென்றார், நான் அவருடன் சொல்லவில்லை என்கிறார். மேலும் சித்ரா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வரும்போது கஞ்சா போதையில் இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் சித்ராவின் தாயாரிடம் நான் என்னை பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினேன். இதனால் அவர் சித்ராவிடம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார். இதில்  வருத்தமடைந்த சித்ரா உன்னை பற்றி எதற்காக என் தாயிடம் கூறினாய்? என்று கேட்டார். மேலும் சித்ரா 3 கோடி ரூபாய் செலவு செய்து திருவான்மியூரில் கட்டிய வீட்டிற்கு இனி செல்ல முடியாதா? என்று வருத்தத்தில் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் திருமண வேலைகளையும் தனியாகத் தான் பார்க்க வேண்டும் என்றும் மன விரக்தியில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கடைசியாக மூன்று நாட்களும் பணத்தை கேட்டு சித்ராவை அவரின் தாயார் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறுகிறார்.

மேலும் ஹோட்டல் அறைக்கு திரும்பிய சித்ரா வழக்கம்போல் மகிழ்ச்சியாக இல்லாமல் வருத்தத்துடன் காணப்பட்டதாகவும், என் குடும்பத்தை உன்னால் தான் பிரிந்து வந்தேன் என்றும் மனம் வெறுத்து பேசி உள்ளதாக கூறியுள்ளார். எனவே இருவரும் வெளியில் புகை பிடிப்பதற்காக சென்றோம். அதன்பிறகு அறைக்கு சென்ற சித்ரா உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். குடும்பத்தை நினைத்து வேதனைப்படுகிறார் என்று எண்ணி நீண்ட நேரமாக கதவை திறக்க கூறினேன். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஹோட்டல் ஊழியரிடம் வேறு சாவி வாங்கி வந்து திறந்தோம். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் பலமுறை எங்களுக்குள் பிரச்சினைகள் சிறிதுசிறிதாக வரும். எனினும் சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்று எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்கிறார். மேலும் வருத்தத்துடன் அறைக்கு திரும்பிய சித்ராவிடம் எனக்கு செய்த சத்தியத்தையும் மீறி அவனுடன் ஆடினாயா? என்று நான் கேட்டேன். அதற்கு சித்ரா இதுதான் உனக்கு ரொம்ப முக்கியமா என்று கூறி கண்கலங்கி உள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே இந்த பிரச்சனை சரியானதாகவும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து மூன்று நாட்களாக சித்ராவின் தாயார் அவருக்கு தொந்தரவு கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நண்பரிடம் தெரிவிக்கிறார்.

மேலும் சித்ராவின் தாயார் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறார். திருவான்மியூர் வீட்டில் அவர்களுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன் அப்போது தான் அவர் எந்த அளவிற்கு தொல்லை கொடுப்பார் என்பதை  நேரில் கண்டதாக கூறியுள்ளார். மேலும் சித்ரா முன்னாள் காதலனுக்கு திருமணம் நடைபெற்றது குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். தைரியமான பெண் என்று வெளியில் காட்டிக் கொண்டாலும் தனியாக அவர் எளிதில் உடைந்து விடுவார் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய ஹேம்நாத் மெலிதான குரலில் சித்ரா அறைக்கு திரும்பும் போது அவரின் தலையில் காயம் இருந்ததை நான் கவனித்தேன் என்கிறார்.

ஆனால் அவர் எங்கு சென்று வந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் ரகசியமாக கூறியுள்ளார். மேலும் ரோகித்திடம் எங்களுக்கு காவல்துறையினர் உன்னிடம் கேட்டால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல் என்கிறார். மேலும் திடீரன்று சித்ராவின் தாயாரை சும்மா விட மாட்டேன் என்று ஆவேசம் அடைகிறார். அதன் பிறகு நானும் அவரைப் போலவே இறந்துவிடுவேன் என்று அலறுகிறார். உரையாடலின் இடையே ரோஹித் பேசுவதை தடுத்து நிறுத்தி ஹேம்நாத் பேச்சை திசை திருப்புகிறார்.

Categories

Tech |