Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு… தெப்பகுளத்தில் இறங்கிய பெருமாள்… மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்புவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு கோவில் சிறப்பு வாய்ந்த சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வருடம் கொரோனா இரண்டாவது வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் தற்போது மூடப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திற்குள் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கும் விழா சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதன்படி நேற்று சௌந்தரராஜ பெருமாள் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் எப்போதும் வழக்கமாக மண்டூக முனிவருக்கு குடகனாற்றில் இறங்கி பெருமாள் சாபவிமோசனம் வழங்குவார். ஆனால் இந்த வருடம் குடகனாற்றிற்கு பெருமாள் அழைத்து வரப்படவில்லை. அதற்கு மாறாக தெப்பகுளத்தில் இறங்கி பெருமாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கினார்.

Categories

Tech |