சித்ரா குறித்து பல தகவல்களை நடிகை ரேகா நாயர் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சித்ரா பற்றி பல தகவல்களை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சித்ராகவும் நானும் ஒன்றாகத்தான் மீடியாவுக்கு வந்தோம். தனக்கு குறுக்கு வழி தெரியாததால் தான் இந்த அளவுக்கு வளரவில்லை. நான் ஒரு ஸ்டிரெயிட் பார்வர்டு. வழ வழ கொழ கொழ பேச்சு எல்லாம் தனக்கு பிடிக்காது. சித்ரா இவ்வளவு சீக்கிரமாக வளர்ந்ததற்கு காரணம் அவர் எல்லோரிடமும் பழகியது தான். சித்ராவுக்கு தான் நிறைய அட்வைஸ் செய்துள்ளேன். இதுபோன்ற ஆட்களோடு பழக்கம் வேண்டாம் எனவும் கூறினேன். என்னுடைய அறிவுரைகளைக் கேட்டு இருந்தால் சித்ராவுக்கு இதுபோன்ற நிலைமை வந்திருக்காது என அவர் கூறியுள்ளார்.