Categories
மாநில செய்திகள்

சிந்தவோ, சிதறவோ, அள்ளவோ கூடாது….. தமிழக ரேஷன் கடைகளுக்கு வந்தது புதிய திட்டம்….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியாக முதல் மு க ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை மூலமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வரை குடும்ப தலைவிகளுக்காக உதவி தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் நிதிநிலை சீரான பிறகு நிச்சயமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரிக்கும் நோக்கத்தில் நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடைகளில் குப்பை இருக்கக்கூடாது என்பதை கொண்டு வரவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் தரையில் அரிசியோ சர்க்கரை போன்ற பொருட்களோ சிதறி இருக்கக்கூடாது. அத்துடன் அதை திரட்டி மக்களுக்கும் கொடுக்க கூடாது சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |