சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள மூக்கு கண்ணாடி விற்பனை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை அக்ரஹாரம் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நைனியப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்த யாகத் அலி என்பவர் மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் கடையை வைத்திருக்கின்றார்.
இந்நிலையில் இவரது கடையில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி வடிவேலு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தார்கள்.