கேன் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட் பிரச்சினையை நீண்ட காலமாகவே பார்க்கிறோம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்..
டி20 உலகக் கோப்பை போட்டியின் 33வது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து சூப்பர் 12 குரூப் 1 அட்டவணையில் தொடக்க 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து சிறந்த நிகர ரன் விகிதத்துடன் அதே புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பிரிஸ்பேனில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து சவாலான 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 47 பந்துகளில் 73 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து ஆடிய நியூசிலாந்து தொடக்கத்தில் போராடியது, ஆனால் நடுத்தர ஓவர்களில் கிளென் பிலிப்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். க்ளென் 36 பந்துகளில் 62 ரன்களும், வில்லியம்சன் 40 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து போராடினர்.
ஆனால் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் நன்றாக பந்துவீசி நியூசிலாந்தை 159/6 என்று கட்டுப்படுத்தி வெற்றி வென்றனர். இப்போட்டியில் வில்லியம்சன் 40 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100.0 ஆக இருந்தது, இது நியூசிலாந்து தோல்விக்கு பெரும் பங்கு வகித்தது. இந்த தொடரில் வில்லியம்சன் 93.42 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் 3 இன்னிங்ஸ்களில் 71 ரன்கள் எடுத்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபரும் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட்டை சுட்டிக்காட்டி, அது எதிரே நிற்கும் மற்ற பேட்டருக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது, “நியூசிலாந்து பேட்டர்கள் தங்களது சிறந்த ஃபார்முக்கு வர வேண்டும், இதை (வில்லியம்சனின் மோசமான ஸ்ட்ரைக் ரேட்) நீண்ட காலமாக நாங்கள் காண்கிறோம். இது இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் தொடங்கும் போது நடந்தது. இன்னிங்ஸ் மற்றும் பவர்பிளே ஓவர்களில் அவர் ரன்களை அடிக்க போராடுகிறார். ஒருவேளை அவர் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் இப்படி விளையாடும்போது, அது நான் ஸ்ட்ரைக்கரில் நிற்கும் மற்ற பேட்டருக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவர் அதைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்,” என்று கூறுகிறார்..