நடிகர் அருண் விஜய் ‘சினம்’ திரைப்படம் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் சினம் . இந்த படத்தை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்குகியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
#SINAM #2021Release #Cop
@MSPLProductions @gnr_kumaravelan @DoneChannel1 pic.twitter.com/UYJL9tbKvs— ArunVijay (@arunvijayno1) December 26, 2020
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘சினம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா? தியேட்டரில் வெளியாகுமா? என்று கேட்ட கேள்விக்கு, தியேட்டரில்தான் வெளியாகும் என அருண் விஜய் பதிலளித்துள்ளார் .