காவல்துறை அதிகாரி தனது மனைவியின் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணத்தை தேடிசெல்லும் கதைக்களம்.
சென்னையின் புறநகர்பகுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அருண்விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். நேர்மையாக தன் பணியை செய்து வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு இவரின் நேர்மையால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அருண்விஜய் மீது சற்றுகோபத்தில் உள்ளார். ஒருநாள் தனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண்விஜய்யின் மனைவி பாலக் லால்வானி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட இவரின் உடலுக்கு அருகே மற்றொரு ஆணின் உடல் உள்ளதால் அவ்வழக்கு “கள்ளக் காதல்” என பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் அருண்விஜய்க்கும் அந்த இன்ஸ்பெக்டரும் மோதல் ஏற்பட, அவரை அருண்விஜய் தாக்கி விடுகிறார். இம்மோதலால் அருண்விஜய் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதன்பின் மீண்டுமாக வேலைக்கு சென்று தனது மனைவின் மரணத்திற்கான காரணத்தை தேடி வழக்கை விசாரணை செய்கிறார். கொலைக்கான காரணத்தை அருண்விஜய் கண்டுபிடித்தாரா..? இல்லையா..?, யார் இக்கொலையை செய்கிறார்கள்?, அந்த இறந்துப்போன மற்ற நபருக்கும் அருண்விஜய் மனைவிக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதிகதை ஆகும்.
காவல்துறை அதிகாரியாக வரும் அருண்விஜய் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கடமை தவறாத, கன்னியமான, நேர்மையான அதிகாரியாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். காதல் மனைவி கொலைசெய்யப்பட்ட சோகம், மனைவி மீதான அவப்பெயரைத் துடைக்க போராடும் சாமானியனின் கோபம் அனைத்தையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். அருண்விஜய்யின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பாலக் லால்வானி சில காட்சிகளே வந்தாலும் அவரது பணியை சிறப்பாக செய்துள்ளார். ஏட்டையாவாக நடித்துள்ள காளி வெங்கட் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம்ஈர்க்கிறார்.
வழக்கமான சினிமாத் தனம் நிறைந்த காவல்துறை திரைப்படமாக இன்றி சற்று வித்யாசம் நிறைந்த கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் பாராட்டுக்களை பெறுகிறார். இயல்பான போலீஸ் கதாப்பாத்திரத்தை வடிவைத்து, அவற்றிற்கு சரியான திரைக்கதையை வடிமைத்து இருக்கிறார். இருப்பினும் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் சிறப்புகவனம் பெற்றிருக்கும். படத்தின் முதல்பாதியில் சற்று விறுவிறுப்பு குறைவாக இருப்பதால் முதல் பாதியில் அதில் கவனம் படத்தின் வில்லனை புது விதமாக அணுகி இருப்பது பாராட்டக்குரியது. அதிகமான கதாப்பாத்திர வடிவமைப்பு இன்றி படத்தை நகர்த்தியுள்ளது கூடுதல் சிறப்பு ஆகும். இதனிடையில் இரவுநேரக் காட்சிகள் அதிகம் இடம்பெற்று இருப்பதால் கோபிநாத்தின் ஒளிப் பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்து உள்ளது. ஷபீர் பின்னணி இசை ரசிக்கும்படி அமையவில்லை. விறுவிறுப்பிற்காக இணைத்து இருக்கும் இசை கவனத்தை சிதறவைத்திருக்கிறது.