பிரபல நடிகை தன் காதல் கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாத்துறையில் எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதைவிட சீக்கிரமாக விவாகரத்து செய்கிறார்கள். சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து சினிமா துறையில் மேலும் ஒரு காதல் தம்பதியினர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷில்பா ஷெட்டி, ஹிந்தி மற்றும் தமிழில் நடித்திருக்கின்றார். சினிமா துறை மட்டுமல்லாது விளையாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐபிஎல்லில் நடத்துகின்றார்.
இவர் ராஜ்குந்த்ரா என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார். ராஜ்குந்த்ரா இளம் பெண்கள் மற்றும் நடிகைகளின் ஆபாச போட்டோக்களை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் இவர் குற்றவாளிதான் என கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. ஷில்பா ஷெட்டி தனது பெயருக்கும் புகழுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் விவாகரத்துக்காக கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து இவர்களின் விவாகரத்து தான் சினிமா துறையில் பெரிய விஷயமாக இருக்கும்.