சினிமா துறையில் அடுத்தடுத்து விவாகரத்து செய்தி வந்து கொண்டிருக்கிறது தற்போது ஹாலிவுட் நடிகையான மேகன் ஃபாக்ஸ் விவாகரத்து செய்துள்ளார்.
மேகன் ஃபாக்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகையாவார். மேகன் ஃபாக்ஸ்க்கு தற்போது 36 வயதாகிறது. திருமணமாகியும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் கோல்டு பிரிக், தே எக்ஸ்பேண்டப்லஸ் 4, ஜானி அண்ட் க்ளைட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகின்றார்.மேகன் ஃபாக்ஸ் ஹோப் அன்ட் ஃபெய்த் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரையன் ஆஸ்டின் க்ரீனை காதலித்தார். அப்பொழுது இவருக்கு 18 வயது மற்றும் பிரையனுக்கு 30 வயது. இதனால் பிறையன் மேகனின் காதலை ஏற்றுக்கொள்ள சற்று யோசித்தார். மேகன் இவரின் மனதை மாற்றி, இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
சில வருடங்களுக்குப் பிறகு 2010ஆம் வருடம் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. 2015ஆம் வருடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது நீதிமன்றம் மேகனுக்கு விவாகரத்து வழங்கியிருக்கிறது. இப்போது இவர்களின் 10 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது.